பட்டு பூச்சிகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கலெக்டர் வழங்கினார்

காஞ்சீபுரம்,

தமிழ்நாடு அரசு, பட்டு பூச்சி வளர்ச்சி துறையின் மூலம் பட்டு வளர்ப்பு செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த முறையில் பட்டு பூச்சி வளர்த்து அதன் மூலம் அதிக லாபம் ஈட்டி முதலிடம் பிடித்த சிறுவாக்கம் கிராமத்தை சேர்ந்த ஆயிப்பன் என்ற விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கதொகையும், 2-ம் இடம் பிடித்த மதுவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த அந்தோணிசாமி என்ற விவசாயிக்கு ரூ.20 ஆயிரம் ஊக்கதொகையும், 3-ம் இடம் பிடித்த பள்ளியகரம் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்ற விவசாயிக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கதொகையும் என மொத்தம் மூன்று விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் ஊக்கதொகையினை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் எஸ்.சத்தியமூர்த்தி, உதவி ஆணையர் (கலால்) ஜீவா, காவேரிப்பாக்கம் மற்றும் வாலாஜா தொழில் நுட்ப சேவை மையத்தினை சார்ந்த உதவி ஆய்வாளர்கள் சுருதி கீர்த்தனா, நாஜீரா மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.




 

" alt="" aria-hidden="true" />




Popular posts
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 40 பேருக்கு மருத்துவ பரிசோதனை:
Image
கொரனாவே மிரண்டு ஓடிடும்.நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் நொடிக்கு நொடி தீவிரம் காட்டும் ஜோலார்பேட்டை அதிமுக நகர செயளாளர் S.P.சீனிவாசன்
Image
இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையில் இயங்கி வரும் சேது கேஸ் ஏஜன்சியில் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்கபடுவதாக பொதுமக்கள் புகார் இ ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையில்சேது கேஸ்ஏஜன்சி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது இந்த ஏஜன்சியில் இருந்து ஏர்வாடி சிக்கல் சிறைக்குளம் வள்ளக்குளம்பனி வாசல் இது போன்ற கிராமங்களுக்கு கேஸ் வினியோகம் செய்யபட்டு வருகிறது இந்தநிறுவனத்தில் இருந்து வினியோகம் செய்யபடும்கேஸ் சிலிண்டர்கள் அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்கபடுகிறது எனவே இந்த பகுதிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் வறட்சியான பகுதியாகும் இந்த பகுதியில் வாழும் மக்கள் படிப்பறிவு குறைவான பாமர மக்கள் இவர்களிடம் இந்த நிறுவனங்கள் அதிக விலைக்கு கேஸ் சிலிண்டர்களை விற்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர் இது போன்ற மோசடிகளை வட்டாச்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நாடவடிக்கை எடுக்க அப்பகுதிபொதுமக்கள் கோரிக்கை
Image
சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை. மதுரையில் பரபரப்பு
Image